கண்தானத்தை வலியுறுத்தி, திருநெல்வேலியில் அரசு மருத்துவர்கள் பங்கேற்ற, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
கண்தானத்தை வலியுறுத்தி, திருநெல்வேலியில் அரசு மருத்துவர்கள் பங்கேற்ற, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி! திருநெல்வேலி, செப்டம்பர்.4:- பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கல்லூரி முதல்வர் டாக்டர் சி. ரேவதி பாலன் வழிகாட்டுதலின்படி, தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவினை முன்னிட்டு, அரசு மருத்துவர்கள் பங்கேற்ற, சைக்கிள் விழிப்புணர்வு பேரணி, இன்று (செப்டம்பர்.4) காலையில், நடைபெற்றது.
கண் தானம் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,நாடு முழுவதிலும், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 25- ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8-ஆம் ஆம் தேதி வரை, "தேசிய கண்தான இரு வார விழா" கொண்டாடப் படுகிறது. அதன்படி, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, மாநகர காவல், பாளையங்கோட்டை சரக உதவி ஆணையாளர் பிரதீப், கொடி அசைத்து, துவக்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம், துணை முதல்வர் டாக்டர். சுரேஷ்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் சிகிச்சைப்பிரிவு துறைத் தலைவர் டாக்டர் ராமலட்சுமி, அனைவரையும் வரவேற்று பேசினார். கண்தானம் பற்றிய, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மருத்துவ மாணவ-மாணவியர், அணி வகுத்து வந்தனர். அவர்களுடன் அரசு மருத்துவர்களும், பேரணியில் கலந்து கொண்டனர். துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஆறுமுகம், கண் சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர்கள் டாக்டர், டாக்டர் ஆனந்தி, டாக்டர் ரீட்டா, உதவி மருத்துவர்கள் உமா, கவிதா மற்றும் செவிலியர்கள், முதுநிலை கண் மருத்துவப் பயிற்சி மாணவர்கள் உட்பட பலரும், பேரணியில் பங்கேற்றிருந்னர். 38-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற, இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், துயர்நிலை ஆலோசகர் மற்றும் உடல் உறுப்புதான மாற்று அறுவைசிகிச்சை ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் ஆகியோரும், கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியானது, அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு முன்பிருந்து துவங்கி, அண்ணா விளையாட்டு திடல், கிருஷ்ணா மருத்துவமனை வழியாக, மீண்டும் அரசு மருத்துவமனையை வந்து அடைந்தது. நிறைவாக, செவிலியர் பயிற்றுநர் செல்வன், அனைவருக்கம் நன்றி கூறினார்.
Tags:
Comments:
Leave a Reply