திருநெல்வேலியில், வேளாண் பொறியியல் துறை மூலம், 78 விவசாயிகளுக்கு மானிய விலையில், பவர் டில்லர் வழங்கிய சபாநாயகர்!
திருநெல்வேலி, செப்டம்பர்.4:- அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, காணொளி காட்சி மூலம், மாநிலம் முழுவதிலுமாக சேர்த்து, மொத்தம் 5 ஆயிரம் சிறு- குறு விவசாயிகளுக்கு, வேளாண் கருவிகள் வழங்கிடும் திட்டத்தை, இன்று (செப்டம்பர்4) காலையில், துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 77 விவசாயிகளுக்கு பவர் டில்லர்களையும், ஒரு விவசாயிக்கு களை பறிக்கும் கருவியையும், மொத்தம் 64 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Comments:
Leave a Reply