கரூரில் 3 நாட்கள் நடைபெறும் 63வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவங்கியது.
கரூரில் 3 நாட்கள் நடைபெறும் 63வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவங்கியது.
கரூரில் மூன்று நாட்கள் நடைபெறும் 63வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் துவங்கியது. துவக்க விழா நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநில கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளை துவக்கி வைத்தார்.
அக்டோபர் 1-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் 63வது மாநில சுண்டாட்ட போட்டியில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, கோயமுத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் என 400 மாணவர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டி முற்றிலும் நாக்அவுட் முறையில் நடைபெற்று வருகிறது
அக்டோபர் 1ம் தேதி மாலை 4 மணிக்கு 63வது மாநில சப் ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. மேலும் இதில் தேர்வாகும் எட்டு பேர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:
Comments:
Leave a Reply