விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காத மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .வேதனையில் மாற்றுத்திறனாளிகள்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்ட அளவில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் குறை கேட்டு கூட்டம் நடைபெறுவது வழக்கம். 27.09.2023 இன்று மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர் வைக்கவில்லை. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகளை பறிக்கொண்டு வருகிறார்.
மாநில மாற்றுத்திறனாளி ஆணையர் அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் நேரில் அழைத்து அறிவுறுத்திய பிறகும் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இது மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-ம் எதிராகவே செயல்பட்டு வருகிறார். இவர் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் அவர்களை வேறு துறைக்கு மாற்றிட வேண்டுமாய் ஐயா அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.
Tags:
Comments:
Leave a Reply