கரூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் முறைத் திருத்தம் 2024 மேற்கொள்வது தொடர்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் காண வரைவு வாக்காளர் பட்டியலை இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டார்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் 2,33,577 வாக்காளர்கள் , அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2,08,398 வாக்காளர்கள், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,07,227 வாக்காளர்கள், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 2,23,221 வாக்காளர்கள் என கரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 8,72,423 வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் பத்திரத்தை இடமாற்றம் சம்பந்தமாக 27.10.2023 முதல் 09.12.2023 வரை மனுக்கள் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த வருடம் 05.01.24 தேதி வெளியிடப்பட உள்ளது.
Tags:
Comments:
Leave a Reply