காரைக்காலில் திருமண விழாவில் தினசரி நாளிதழ் வடிவில் பேனர் வைத்து வரவேற்பு அளித்த நண்பர்கள். பேனர் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல்.
காரைக்காலில் வாரச்சந்தை அருகே தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மணமகன் அருண் பிரசாத் மணமகள் மதுநிகா ஆகிய இருவரும் ஒரு வருடம் காதலித்து தற்போது திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற திருமணத்தில் அவரது நண்பர்கள் தினசரி நாளிதழ் வடிவில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது. அதில் காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை செய்து வைக்கப்படுகிறது. என்றும் கறிகஞ்சி கிடைக்காததால் கைகலப்பு என்றும் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மணப்பெண் தேவை என்று நான்கு 2கே கிட்ஸ் இளைஞர்கள் தங்களது புகைப்படம், வயது, படிப்பு, பதிவிட்டு தொழில் வேலையில்லாத பட்டதாரி என்று குறிப்பிட்டு அடுத்த மாப்பிள்ளை நாங்க பொண்ணு இருந்தா தாங்க குறிப்பு பொண்ணா இருந்தா மட்டும் போதும் என்று வாசகத்துடன் பதிவிட்டுள்ளனர். 90 கிட்ஸ் பெண்கள் கிடைக்காத சூழ்நிலையில் தற்போது 2கே கிட்ஸ்களும் பெண்கள் கேட்டு பேனர் வைத்தது சிரிப்பிலேயே ஏற்படுத்தியது. மேலும் திருமணத்தில் வாயில் வைக்கப்பட்ட இந்த பேனரை வாகன ஓட்டிகள் நின்று படித்து ரசித்தவரே சென்று வருகின்றனர்.
Tags:
Comments:
Leave a Reply