கரூரில்கொங்கு சகோதயா மாநில ஜூடோ போட்டி பரணி வித்யாலயா ஒட்டு மொத்த சாம்பியன்
மாநில அளவிலான கொங்கு சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற ஜூடோ போட்டியில் பரணி வித்யாலயா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. அண்மையில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற கொங்கு சகோதயா கூட்டமைப்பு CBSE பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டியில் 15 CBSE பள்ளிகளிலிருந்து 98 வகையான பிரிவுகளில் 325 வீரர், வீரங்கணைகள் கலந்து கொண்டனர்.
இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியின் சஞ்சித், லிஷான் லெஸி, கவின், விகாஷ், சஞ்சய், சச்சின், லக்ஷன் ராகவேந்திரா, சிங்காரவேலன், பிரிதிவிராஜா, கீதப்பிரியன், மனுஷ், ஆன்டனி லார்ட்சன், விகாஸ், யஸ்வந்த், தர்ஷன், சுபஸ்ரீ, தேவஸ்ரீ, ஸ்ரீனா, சம்யுக்தா, கீர்த்தி நாச்சியார், துசிதா, ஜனனி, சஹானா, சுஜிதா, லிதன்யா, அம்ரிதா, வைஷாலி, ஹாசினி, ராஜேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றனர். விசாகன், ஸ்ரீஅபிநவ், பிரதீப், இனியன், தரணீஸ், சர்வேஷ், சரண், ரித்தின் வர்ஷன், சஸ்வந்த்ராஜ், சுரேந்தர், தீபன், தரணீஷ், கவின், கிருத்திக், ஸ்ரீஆதித்யா, யுகா, தர்ஷனா, மதுநிஷா, ஹீரா, துர்கேஷினி, ஸ்ரீதன்யா, நந்திதா, லலந்திகா, கனிஷ்கா வெள்ளிப்பதக்கம் வென்றனர். தீபேஷ், அபினவ் வர்ஷன், துவாரகேஷ், ஸ்ரீகைலேஷ், பரணிதரன், தரணிதரன், ராகுல்குமார், சுபிக்ஷன், அருண் காஸ், ஆதி, விஜய், மிருத்திகா, பிரதிக்ஷனா, சம்யுக்தா, அபிஸ்ரீ, பூஜா, அஷ்மிதா, சஞ்சனா, கிஷாந்தினி, ஆர்த்திகா, தேவமித்ரா, ஹர்சிதா வெண்கலப்பதக்கம் வென்றனர்.
இப்போட்டியில் பரணி வித்யாலயா மொத்தமாக 29 தங்கப்பதக்கத்தையும், 24 வெள்ளிப்பதக்கத்தையும், 22 வெண்கல பதக்கத்தையும் வென்று ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாவது முறையாக 75 பதக்கங்களுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக கொங்கு சகோதயா மாநில அளவிலான ஜூடோ போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜுடோ சங்க மாநில துணைத் தலைவரும், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவர்.C.ராமசுப்பிரமணியன், முதல்வர் S.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள், ஜூடோ பயிற்சியாளர்கள், முத்துலட்சுமி, பார்த்திபன், ரம்யா, கார்த்திகேயன், துரை, சாதனை படைத்த ஜூடோ விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் திருமதி.பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் M.சுபாஷினி மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
Tags:
Comments:
Leave a Reply