கிராம ஊராட்சிகளுக்கு, 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் மற்றும் மின்கல வண்டிகளை வழங்கிய, அமைச்சர் தங்கம் தென்னரசு!
திருநெல்வேலி மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளுக்கு, 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் மற்றும் மின்கல வண்டிகளை வழங்கிய, அமைச்சர் தங்கம் தென்னரசு! திருநெல்வேலி, செப்டம்பர்.6:-திடக்கழிவு மேலாண்மை பணிகளை, ஊரகப்பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு, மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 204 ஊராட்சிகளில், முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 20 கிராம ஊராட்சிகளுக்கு, அந்தந்த ஊராட்சி மூலம் வழங்கப்பட்ட, தன்னிறைவு திட்ட அறிக்கையின் அடிப்படையில், ஊரக தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15-வது நிதிக்குழு மானியநிதி ஒதுக்கீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, டிராக்டர்கள் மற்றும் மின்கல வண்டிகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாநகராட்சிக்கு எதிரே உள்ள, பொருட்காட்சி திடலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், 25 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான 10 மின்கல வண்டிகள், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 பெரிய டிராக்டர்கள், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 சிறிய டிராக்டர்கள் என, மொத்தம் 94 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள், இவ்வாறு வழங்கப்பட்டன. அந்தந்த வாகனங்களுக்குரிய சாவிகளை, அந்தந்த கிராம ஊராட்சி தலைவர்களிடம், தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முறைப்படி ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் வ. சிவ கிருஷ்ண மூர்த்தி, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், தமிழக முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி. பி.எம். மைதீன்கான், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கே.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Comments:
Leave a Reply