அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது
கரூரில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் கோவிலில் உறியடி மற்றும் வலுக்கும் மரம் ஏறும் நிகழ்ச்சி விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் சன்னதி தெருவில் உள்ள பாண்டுரங்க ராஜ விட்டல்நாதர் கோயிலில் உறியடி உற்சவம் மற்றும் வலுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு வலுக்கு மரம் ஏறினர் இதில் வழுக்கு மரத்தில் மேலே ஏறிய இளைஞர் சுற்றி கட்டப்பட்டிருந்த குச்சியில் உள்ள பழங்கள்,முறுக்கு,சோளக்கதிர் உள்ளிட்டவைகளை உதிர்த்து கீழே தள்ளி பிரசாதமாக எடுத்துச் சென்ற பக்தர்கள் மேலும் முன்னதாக கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு கிருஷ்ணர் ராதை வேடமடைந்து வந்த 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோயிலின் முன்பு அமர வைக்கப்பட்டிருந்தனர் இதில் தத்ரூபமாக கிருஷ்ணர், ராதை வேடமடைந்து வந்த குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு திருக்குறள் பேரவை சார்பில் மேலே.பழனியப்பன் அவர்கள் நாளை பரிசுகள் வழங்க உள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது
Tags:
Comments:
Leave a Reply