கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. கடை உரிமையாளர் தப்பி ஓட்டம்.
கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் இயங்கி வரும் பிரபல சக்தி ஃபாஸ்ட் ஃபுட் கடையில் இருந்து சிக்கன் ரைஸ்
குருபரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் அப்பகுதியில் இயங்கிவரும்
தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு
சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளார்.
இந்த சிக்கன்ரைசை
சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு நேற்று இரவு தூக்கத்தில் திடிரென வாத்தி, மையக்கம் ஏற்பட்டுள்ளது,
உடனடியாக அங்கு இருந்தவர்க பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டு. அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள்
தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சக்தி ஃபாஸ்ட் ஃபுட் கடையின் உரிமையாளர் சேட்டை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சமுக ஆர்வாளர் சந்திரமோகன் கூறுகையில் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் பாஸ்ட்புட் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததால்
இதுபோன்ற அவலங்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது, இது பேன்ற அவலங்களை மேலும் தொடராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை உரிய எடுக்க வேண்டும் என
கோரிக்கை விடுத்தார்.
மேலும் கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் கடையில் வாங்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் வாத்தி பேதி ஏற்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தி உள்ளது
Tags:
Comments:
Leave a Reply