கேளம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அரசு விலையில்லா மிதிவண்டிகளை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் ஆகியோர் வழங்கினர்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது, கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் .பாலாஜி, சமீப காலமாக மாணவர்கள் இடையே சமூக வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் புகுந்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது எந்த சூழ்நிலையிலும் மாணவப் பருவத்தில் மட்டுமல்லாது வாழ்வில் எந்த சூழ்நிலைகளையும் சக மனிதர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய குழு துணை தலைவர் காயத்ரி அன்பு செழியன், திமுக திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் செல்லப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Comments:
Leave a Reply