சாதி,மத, இன பேதமின்றி, அனைத்து மக்களுக்கும், சிறந்த முறையில் சேவை செய்த, திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக, மருத்துவ சேவை அணிக்கு பாராட்டு கேடயம்! கரூரில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர் எம்.ஹெய்ச். ஜவாஹிருல்லா வழங்கினார்!
திருநெல்வேலி,அக்.8:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின், மருத்துவ சேவை அணிகளின், மாநில செயற்குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். ஹெய்ச்.ஜவாஹிருல்லா தலைமையில், கரூரில் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட மருத்துவ சேவை அணியின், மாவட்ட செயலாளர் குதா முகம்மது கலந்து கொண்டார். திருநெல்வேலி மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பில், சாதி, மத, இன பேதமின்றி, அனைத்து மக்களுக்கும், சிறப்பாக மருத்துவ சேவை புரிந்த, குறிப்பாக அதிக அளவில் ரத்ததானம் வழங்கியதை பாராட்டி, மாநில தலைவர் பேராசிரியர் எம்.ஹெய்ச். ஜவாஹிருல்லா, கேடயம் வழங்கி, கவுரவித்தார்.இந்த பாராட்டு
கேடயத்தை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின், திருநெல்வேலி மாவட்ட தலைவரும், நெல்லை மாநகராட்சி கவுன்சிலரும், நெல்லை திட்டக்குழு உறுப்பினருமான கே.எஸ் ரசூல் மைதீன், மாவட்ட பொருளாளர் "தேயிலை" மைதீன், மாநில இளைஞர் அணி பொருளாளர் ரியாசுர் ரகுமான், மாவட்ட துணை செயலாளர் அ.காஜா ஆகியோரிடம், நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் குதா முகம்மது, கேடயத்தை காண்பித்து, வாழ்த்துக்கள் பெற்றார். அப்போது, மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் சேக்மதார், மேலப்பாளையம் பகுதி செயலாளர் ஈ.எம்.
அப்துல்காதர் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:
Comments:
Leave a Reply