திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவலில், காவல்துறையினர் நடத்திய, மதநல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்!
திருநெல்வேலி,அக்.8:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், "மேலச்செவல்" கிராமத்தில், அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து, காவல்துறையினர் நடத்திய, "மத நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்" இன்று (அக்டோபர்.8) நடைபெற்றது. மேலச்செவல் பேரூராட்சி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மேலச்செவல் பேரூராட்சி தலைவி அன்னபூரணி ராஜன் தலைமை வகித்தார். சேரன் மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுபக்குமார், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, சேரன்மகாதேவி வருவாய் வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர். முன்னீர் பள்ளம் காவல் ஆய்வாளர் யுனோஸ் குமார், அனைவரையும் வரவேற்று பேசினார். மேலச்செவல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, சமூக ஆர்வலர் நெய்னா முகம்மது உட்பட, அனைத்து சமுதாய மக்களும், மிகுந்த ஆர்வத்துடன் அதிக உற்சாகத்துடன், இந்த கலந்து கொண்டனர். "மதநல்லிணக்கம், மனிதநேயம், தேசிய ஒருமைப்பாடு ஆகிய நற்குணங்களை பின்பற்றி, மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, ஒற்றுமையுடன் வாழ வேண்டும்!" என்பதை, இக்கூட்டத்தில் பேசிய அனைவரும் வலியுறுத்தி பேசினர். அதனை தொடர்ந்து, அனைவரும் "மதநல்லிணக்க உறுதிமொழி" எடுத்துக் கொண்டனர். கூட்டத்தின் முடிவில்,
பத்தமடை வருவாய் ஆய்வாளர் கனக ராணி, அனைவருக்கும் நன்றி கூறினார
Tags:
Comments:
Leave a Reply