தமிழகத்தின் தென் திருப்பதியான கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பட்டாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்து தீபாராதனை காண்பித்தார். பின்னர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிறப்பாக எற்பாடு செய்திருந்த இந்து சமய அறநிலைத்துறையினர்
மேலும் வருகின்ற 24-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் தொடர்ந்து 26 ஆம் தேதி திருத்தேர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Comments:
Leave a Reply