Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கஸ்பாகாரனை, கிராஜுவேட்ஸ் சார்பாக மாதாந்திர விழிப்புணர்வு, கலை நிகழ்வுகள்

கஸ்பாகாரனை, கிராஜுவேட்ஸ் சார்பாக மாதாந்திர விழிப்புணர்வு, கலை நிகழ்வுகள்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் 

கிராஜுவேட்ஸ் அசோசியேசன் கஸ்பாகாரனை பதிவு எண் 49/2023 சார்பாக மாதாந்திர விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள்  17.09.2023 அன்று நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகளான தலைவர் பஞ்சன்,  செயலாளர் மகாவிஷ்ணு, பொருளாளர் ஜோதி தலைமை வகித்தனர். 


துணை தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் பிரபு, ஆலோசகர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்த நிகழ்வில் தற்போது அதி வேகமாக பரவும் டெங்கு மற்றும் முதியோர் இல்லம் பற்றிய நாடகம், போக்சோ,  குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு,பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து இறுதியாக போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டன.


மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் கல்வி இணைச் செயல்பாடுகளில் பங்கேற்று சிறப்புத்தனர்.


தங்கள் குழந்தைகளின் திறன்களை வளர்ப்பதற்கு வாய்ப்பு வழங்கிய ஜீஏகே-விற்கு அப்பகுதி வாழ் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *