தின தேவைக்கு தண்ணீர் இல்லாமல் நடுரோட்டில் காலி குடங்களை வைத்துக்கொண்டு புலம்பும் சிவனார் தாங்கள் ஆதிதிராவிடர் பகுதி மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிவனார்தாங்கல் கிராமத்தில் காலனி பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு போதுமான குடிநீர் வசதிகளும் இல்லாமல் மிகவும் அவதி படுகிறார்கள் . வீட்டுக்கு வீடு குடிநீர் பழுப்பு கேட்டு குடிநீர் பழுப்பு போடாததால் கால்வாயில் குடிநீரும் சேர்ந்து வருவதால் . கிராம பொதுமக்கள் நீரை பயன்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு மலேரியா போன்ற பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள் . இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை இதனால் சிவனார்தாங்கல் காலனி பொதுமக்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாகிறார்கள். மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்
Comments:
Leave a Reply