திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலுக்கு உபயமாக வரப்பெற்ற கால்நடைகளில், உபரியாக உள்ளவற்றை, தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை பின்பற்றி, உரிய பயனாளிகளுக்கு வழங்க திருக்கோயில் அறங்காவலர் குழுவால் தீர்மா
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலுக்கு உபயமாக வரப்பெற்ற கால்நடைகளில், உபரியாக உள்ளவற்றை, தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை பின்பற்றி, உரிய பயனாளிகளுக்கு வழங்க திருக்கோயில் அறங்காவலர் குழுவால் தீர்மானிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலரால், நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் திருமதி.உமா அவர்களின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் அவர்கள் பரிந்துரையின்படி, 17 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள உரிய பயனாளிகள் வரவழைக்கப்பட்டு, அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் மேற்கு வாயில் முன்பு. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு. E.R. ஈஸ்வரன் அவர்கள், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் திருமதி. நளினி சுரேஷ்பாபு அவர்கள், முன்னாள் நகர மன்ற தலைவர் மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திரு. ஆர். நடேசன் அவர்கள். திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் திரு.செ. தங்கமுத்து அவர்கள் மற்றும் அறங்காவலர்கள், உதவி ஆணையர்/ செயல் அலுவலர் மு. இரமணிகாந்தன் அவர்கள், கண்காணிப்பாளர் ஆ. சுரேஷ் அவர்கள் சுரேஷ்பாபு மற்றும் முக்கிய பிரமுகர்களால் 17 பயனாளிகளுக்கு பசு மாடு-4. கிடாரி கன்று-8, காளைக்கன்று-6 மொத்தம் 18 கால்நடைகளை, குலுக்கள் முறையில் தனித்தனியே தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டதில், பயனாளிகள் பெருமகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
மேற்படி பயனாளிகள் திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலருக்கு உரிய உறுதிமொழி ஒப்பந்தப்பத்திரம் எழுத்துப்பூர்வமாக வழங்கி, மேற்படி கால்டைகளை பெற்றுக் கொண்டது குறிப்பிப்பிடத்தக்கது
Tags:
Comments:
Leave a Reply