Monday, December 23
Breaking News:
Breaking News:
திருநெல்வேலியில், கருணாநிதி நூற்றாண்டு விழா! சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி

திருநெல்வேலியில், கருணாநிதி நூற்றாண்டு விழா! சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி

தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி யின் நூற்றாண்டு விழா, தற்போது தமிழமெங்கும்  மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஓராண்டு காலத்துக்கு நடத்தப்படும் இவ்விழாவின் ஒருபகுதியாக,திருநெல்வேலியில் இன்று (ஆகஸ்ட்.31)  காலையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின்,  சாலைப்பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின், திருநெல்வேலி மண்டல நிர்வாக இயக்குநர் (MANAGING DIRECTOR) மகேந்திரன், கொடி அசைத்து துவக்கி வைத்தார். வேயந்தான் குளம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி, வீரமாணிக்கபுரம் சந்திப்பு, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வழியாக என்.ஜி.ஓ. காலனியில் முடிவடைந்தது. பேரணியில் ஓட்டுநர்கள், பயிற்றுநர்கள்,  விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்,  வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், நெடுஞ்சாலைத்துறை சாலைப்பாதுகாப்பு கோட்டப்பொறியாளர் சுந்தர்சிங், உதவி இயக்குநர் சசிகலா உட்பட பலர், பங்கேற்றனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *