Tuesday, December 24
Breaking News:
Breaking News:
திருநெல்வேலியில், மத்திய நிதி மற்றும் உள்துறை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்  பிறந்த தின விழா!

திருநெல்வேலியில், மத்திய நிதி மற்றும் உள்துறை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த தின விழா!

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்  பிறந்த தின விழா! பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, காங்கிரசார் கொண்டாட்டம்! திருநெல்வேலி, செப்டம்பர்.16:-  முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின், 78- வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று (செப்டம்பர்.16) காலையில், திருநெல்வேலி  மாவட்ட காங்கிரஸ்  சார்பாக, நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள, பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்து நின்ற பயணிகளுக்கும், பேருந்தில் ஏறிய மற்றும் இறங்கிய பயணிகளுக்கும், இனிப்பு வழங்கப்பட்டன. முன்னதாக பட்டாசுகள் வெடிக்கப்லட்டன. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் எம்.யோபு  தலைமை வகித்தார். நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏ.எம்.ரில்வான்,  தமிழ்நாடு ஜவகர் பால் மஞ்சு ஒருங்கிணைப்பாளர் எஸ். வடிவேல் குமரன் ஆகியோர், முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகர் மாவட்ட  இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அருள்ராஜ், அனைவரையும்,  வரவேற்று  பேசினார். சிறப்பு  அழைப்பாளராக, காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர்  சி.மரிய குழந்தை ,விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் எஸ்.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்று, அனைவருக்கும்  இனிப்புகளை வழங்கினர். மூத்த வழக்கறிஞர் டி. ராம்குமார், நெல்லை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் அழகை வி. மாரியப்பன், எஸ்.சிவன் பெருமாள், நெல்லை மாநகர் ஜவகர் பால்மஞ்ச் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிதம்பரம்,  புறநகர் ஜவகர் பால் மஞ்ச் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உட்பட, திரளானோர், கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் WMP. சாம் வில்லியம்ஸ் ,பாளை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் K.ராஜகுரு , நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் R.ராஜா மெர்சி,  நெல்லை மாநகர இளைஞர் காங்கிரஸ் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் A.M.ரியாஸ் , இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் J.ஜான் , A.வாசிக் அலி, S.ப்ரோஸ் கான், S.குமார் ,S.திருமலை குமார், I.மோசஸ்,  முன்னாள் மண்டல தலைவர் காங்கிரஸ் கார்த்தி,விவசாயிகள் பிரிவு அருமை செல்வன்,  பசீர் முகமது, சேக் செய்யது அலி, தங்க மாரியப்பன் உட்பட நிர்வாகிகள் திரளாக, கலந்து கொண்டனர். நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சாம் வில்லியம்ஸ்,  நன்றி கூறினார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *