Sunday, November 24
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு மலர் கொடுத்து, மனமுவந்து அவர்களை  வரவேற்ற, மூத்த மாணவ,மாணவிகள்

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு மலர் கொடுத்து, மனமுவந்து அவர்களை வரவேற்ற, மூத்த மாணவ,மாணவிகள்

திருநெல்வேலி, செப்டம்பர்.2:- தமிழ்நாடு டாகடர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழ்நாட்டில் மொத்தம்  38 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி, சுமார் 60 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மருத்துவ கல்லூரி ஆகும். அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட பெருமைக்குரிய இந்ந கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள், இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நன்நாளான, செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கின. முதன்முதலாக கல்லூரிக்கு வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு,  மலர் கொடுத்து அவர்களை மூத்த மாணவ, மாணவிகள், மனமுவந்து மகிழ்ச்சி பொங்க, வரவேற்றனர். தமிழக அரசின் 7 புள்ளி 5  சதவிகித இட ஒதுக்கீட்டில் தேர்வானார்கள் உட்பட, மொத்தம் 250 மாணவ, மாணவிகள்,  திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கை பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 250 பேர்களில், வகுப்புகள் தொடங்கிய முதல் நாளில், 228 பேர்கள் மட்டுமே, தங்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும், கல்லூரியின் மூத்த மாணவ, மாணவிகள், வாசமிகு வண்ண மலர்களையும், சுவைமிகு உயர்தர இனிப்புகளையும் கொடுத்து, அவர்களை அன்புடன் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியை,  கல்லூரி முதல்வர் டாக்டர் C. ரேவதி பாலன், முதன்முதலாக புதிய மாணவி ஒருவருக்கு, மலர் வழங்கி, வாஞ்சையுடன் துவக்கி வைத்தார். வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, மூத்த மாணவிகள் கூறுகையில், " ராக்கிங் என்பதே, திருநெல்வேலி?அரசு மருத்துவ கல்லூரியில் கிடையாது!"- என்று, தெரிவித்தனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *