Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி மாவட்டத்தில்,நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த, கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார்  திருத்தலத் திருவிழா

திருநெல்வேலி மாவட்டத்தில்,நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த, கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தலத் திருவிழா

திருநெல்வேலி மாவட்டத்தில்,நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த, கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார்  திருத்தலத் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திரளான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி, செப்டம்பர்.2:- திருநெல்வேலி புறநகர்  மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள  கல்லிடைக்குறிச்சியில், 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த, "புனித அந்தோணியார்" கத்தோலிக்க  திருத்தலத் திருவிழா, நேற்று (செப்டம்பர்.1)  கொடியேற்றத்துடன், வெகுவிமரிசையாக தொடங்கியது. தென்காசி மாவட்டம், வெய்க்காளிப்பட்டியில் உள்ள, புனித வளனார் கலை -அறிவியல் கல்லூரியின் செயலாளர் "அருட் தந்தை" சகாய ஜான் அடிகளார்,                         இத்திருவிழாவிற்கு தலைமை வகித்து,புனிதக் கொடியை ஏற்றி வைத்து, திருவிழாவை தொடங்கி வைத்தார். 

நெல்லை மாவட்டம்,  முக்கூடல்

"சிங்கம்பாறை" பங்கு குரு "அருட்பணி" அருள் நேசமணி  அடிகளார், திருப்பலியை, நிறைவேற்றி வைத்தார். 

மொத்தம் 

13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் மாலையில், திருப்பலி மற்றும் நற்கருணை ஆதிர்வாதம் நடைபெறுகிறது. இம்மாதம் 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலையில்,  பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு "அருட்பணி" குழந்தை ராஜ் அடிகளார் தலைமையில், திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. 

இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளையும்,பாளை வட்டார அதிபரும், பங்குத் தந்தையுமான "அருட்தந்தை" அருள் அந்தோணி செய்து வருகிறார். கொடியேற்று விழா நிகழ்ச்சியில், கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான பொட்டல், மணிமுத்தாறு, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய பகுதிளில் இருந்து, திரளான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்."TALKS OF INDIA"செய்திகளுக்காக, கல்லிடைகுறிச்சியில் இருந்து, திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *