Saturday, November 23
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்ற, மாரடைப்பு தொடர்பான நிலையான  இயக்கநெறிமுறை வகுப்புகள்!  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்ற, மாரடைப்பு தொடர்பான நிலையான இயக்கநெறிமுறை வகுப்புகள்! மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி, செப்டம்பர்.15:- பாளையங்கோட்டை, ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருதயவியல் துறை சார்பில், "மாரடைப்பு நோய்க்கான, நிலையான இயக்க நெறிமுறை (standard operating protocol) இரண்டாம் கட்ட வகுப்புகள், இன்று (செப்டம்பர்.15) காலையில் நடைபெற்றன. ஒரு மையம் மற்றும் அதன் ஆரங்கள்( HUB AND SPOKE MODEL) முறைப்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை, மேல்சிகிச்சை மையமாகக் கொண்டு,   நெல்லை, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய,  நான்கு தென் மாவட்டங்களில் உள்ள,  மேலப்பாளையம், நான்குநேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளை சார்ந்த, அனைவரின் பங்களிப்புடன், மாரடைப்பு நோய்க்கான இத்திட்ட முறை மிகச்சிறப்பாக, செயல்பட்டு வருகிறது. மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஸ்டீமி (STEMI)வகையை சேர்ந்த, மாரடைப்பு நோயாளிகளுக்கு, இருதய தமனிக்குழாய் பரிசோதனை மற்றும் சீரமைத்தல்( coronary angiogram & angioplasty)  ஆகிய, சிகிச்சை முறைகள் பிரைமரி (Primary)  மற்றும் பார் பார்மகோ இன்வேசிவ் ( முறைப்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக, அதே சமயம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு எவ்விதச் செலவுமின்றி, செய்யப்படுகிறது.

மாரடைப்பு நோயாளிகளுக்கு, மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டது முதல், அதாவது மருத்துவமனையில் ஸடீமி (STEMI) மாரடைப்பு அறியப்பட்ட நேரத்தில் இருந்து, 90 நிமிடங்களுக்குள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையின், இருதய உட்புகுத்துதல்  பரிசோதனை மையத்திற்கு (cath lab) அனுப்பி வைக்க முடியும் எனில், பிரைமரி முறைப்படி இருதயத் தமனிப் பரிசோதனை செய்யப்பட்டுத் தகுந்த தமனிகளானது, வலை மூலம் (STENT) சீரமைக்கப்படும். தகுந்த நேரத்தில் அனுப்ப முடியாத நிலை ஏற்படும் எனில் முதலில் இரத்தக் கட்டுகளைக் கரைக்க கூடிய மருந்துகள் (Thrombolysing agents) உட்புகுத்தப்பட்டு அந்நேரத்தில் இருந்து 3 முதல் 24 மணி நேரத்திற்குள் பார்மகோஇன்வேசிவ் (PHARMACO INVASIVE)  முறைப்படி இருதயத் தமனிகள் சீரமைக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு இரத்தக்கட்டு கரைக்கும் மருந்து (spoke hospitals) இந்த 9 அரசு மருத்துவமனைகளிலோ அல்லது அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளிலோ செலுத்தப்பட்டு, தங்கள் மருத்துவமனைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக, முதலமைச்சரின் "விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்" இருக்குமெனில், அவற்றின் விவரங்களுடன் அனுப்பப்பட்டால், இந்த சிகிச்சை முறை, மேலும் பலபேருக்கு பயன்படும்.

மேற்குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து பங்கேற்கும், 20 அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் அறியக் கூடிய வகையில், இது போன்ற வகுப்புகள் அடுத்தடுத்து நடைபெறும்! என, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *