திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு
திருநெல்வேலி, செப்டம்பர்.15:- திராவிடர் கழகத்தின் நிறுவனர் ஈ.வெ. ராமசாமியான, தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17- ஆம் தேதியை, "சமூக நீதி நாள்" ஆக கடைபிடிக்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 17-ஆம் தேதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால், வேலை நாளான இன்று (செப்டம்பர்.15) காலையில், பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் தலைமையில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்திரன், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பொன்.ரகு, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன், மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் ஆகீயோரும், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரும் இணைந்து, "சமூக நீதி நாள்" விழிப்புணர்வு "உறுதிமொழி" எடுத்துக்கொண்டனர். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன்!
சுயமரியாதையும், ஆளுமைத் திறனும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவைகளாக, என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக, நான் என்னை ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடத்தின் மீது பற்றையும், மனிதாபிமானத்தையும் என்றென்றும் போற்றுவேன்.
சமூக நீதியையே அடித்தளமாகக்கொண்ட சமுதாயம் அமைத்திட, இந்த நாளில் நான் மனதார உறுதி ஏற்கிறேன்!" என்று உறுதிமொழி ஏற்றனர்.
Tags:
Comments:
Leave a Reply