திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் நி.வெ.ச.அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற,மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா!
பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் பங்கேற்று, பரிசுகள் வழங்கினார்!
திருநெல்வேலி, செப்டம்பர்.25:-
திருநெல்வேலி புறநகர் மாவட்டம், ராதாபுரம் நி.வெ.ச.அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 2022-23 கல்வியாண்டில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில், பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் முன்னாள் மாணவரும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் இயக்குனருமான "முனைவர்".சு.பரமசிவன் தலைமையேற்று சிறப்புரையாற்றி, மாணவ மாணவிகளுக்கு தன்னுடைய தந்தையார் ப.சுடலையாடும் பெருமாள் மற்றும் தன்னுடைய தாயார் சு.ஈஸ்வரத்தம்மாள் சகோதரர் சு.சாமி ஆகிய மூவரின் நினைவாக, தனது சொந்த நிதியிலிருந்து, ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கான, ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பள்ளித்தலைமை ஆசிரியை பிளாரன்ஸ் அம்மையார் அனைவரையும் வரவேற்று பேசினார்.ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மி.ஜோசப் பெல்சி, வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், ராதாபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர் பரிமளம் கருணாநிதி, சமூகரெங்கபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர் இசக்கிபாபு ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவி பொன் மீனாட்சி அரவிந்தன், ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அரவிந்தன், ராதாபுரம் ஒன்றிய திமுக அவைத் தலைவர் ராமையா, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் கோவிந்தராஜ், திருநெல்வேலி மாவட்ட இந்துசமய அறங்காவலர் குழு உறுப்பினர் "சமூகை" முரளி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி பார்வதி, துணைத் தலைவி லெட்சுமி, ராதாபுரம் உள்ளூர் பிரமுகர் அகஸ்டின் மற்றும் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், இந்நாள் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.உதவி தலைமை ஆசிரியை அனைவருக்கும் நன்றி கூறினார்.மாண்புமிகு சட்டமன்ற பேரவைத் மு.அப்பாவு ஏற்பாட்டில், மாணவ, மாணவிகள் ஆசிரிய,ஆசிரியைகள் உள்ளிட்ட அனைவருக்கும், வடை, பாயாசத்துடன் சுவையான அசைவ உணவு, மதிய சாப்பாடாக வழங்கப்பட்டது.
Tags:
Comments:
Leave a Reply