Thursday, January 23
Breaking News:
Breaking News:
தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் மன்ற            ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற, ஒருநாள் பயிற்சி முகாம்!

தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற, ஒருநாள் பயிற்சி முகாம்!

பாளையங்கோட்டையில்,தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில்,தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் மன்ற            ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற, ஒருநாள் பயிற்சி முகாம்!  திருநெல்வேலி,நவ.7:-  திருநெல்வேலி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் "முனைவர்" செல்வின் சாமுவேல் தலைமையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும்,  தேசிய பசுமை படை மற்றும் சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற, ஒருநாள் பயிற்சி முகாம், பாளையங்கோட்டை மத்திய  சிறைச்சாலை எதிரே உள்ள, "பிளாரன்ஸ் சுவைன்ஸ்"  செவித்திறன் குறைந்தோர், மேல்நிலை பள்ளியில் வைத்து, நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும், மாவட்ட சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அபிநய சுந்தரம் வரவேற்று  பேசினார்.

செவித்திறன் குறைந்தோர் பள்ளியின், தலைமை ஆசிரியர் ஜான்சன், வள்ளியூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சாது சுந்தர் சிங் ஆகியோர், முன்னிலை வகித்தனர். "ஓசையில்லா தீபாவளி, புகையில்லா போகி!" என்பது குறித்த, தாழையூத்து, சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப்பள்ளியின், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் "கவிஞர்" கோ.கணபதி சுப்பிரமணியன், பிளாஸ்டிக் தவிர்ப்போம் சூழல் காப்போம்!" என்னும் தலைப்பில், தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர், "பசும்பொன்" முத்துராமலிங்கத் தேவர் கலை- அறிவியல் கல்லூரியின், விலங்கியல் "பேராசிரியர்" கொம்பையா,

 " சூழல் காப்பதில், ஆசிரியர்களின் பங்கு!" என்பது பற்றி, திருநெல்வேலி பேரிடர்  மேலாண்மைக்கான, வட்டாட்சியர்,                    க.செல்வன், மூலிகை மருத்துவ பயன்பாடு குறித்து மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ் ஆகியோர், "சிறப்புரை" நிகழ்த்தினர். இந்த பயிற்சி முகாமில், நெல்லை மாவட்டத்தின், பல்வேறு மேல்நிலை பள்ளிகளில் இருந்து, 

 ஆசிரிய- ஆசிரியை ஒருங்கிணைப் பாளர்கள், மொத்தம் 265 பங்கேற்ற, பயிற்சி பெற்றனர். மூலிகை மரக்கன்றுகள் மற்றும்  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஆகியன, அனைவருக்கும் வழங்கப்பட்டன. நிறைவாக, சேரன்மகாதேவி  கல்வி மாவட்ட, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் டி.எஃப்.ஜோசப், அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை, முதன்மை கல்வி அலுவலர்.அ. சின்னராசு, மிகச்சிறப்பாக சிறப்பாக செய்திருந்தார்.----------------------------"TALKS OF INDIA"செய்திகளுக்காக, பாளையங்கோட்டையில் இருந்து, திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்  "மேலப்பாளையம்" ஹஸன்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *