முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி
திருநெல்வேலி பேட்டையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி! பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர், உற்சாகத்துடன் பங்கேற்று, பேசினர்! திருநெல்வேலி,நவ.7:- "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்" மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில், “மாணவ நேசன் – முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100” - என்னும் தலைப்பிலான பேச்சுப்போட்டி, திருநெல்வேலியை அடுத்துள்ள, பேட்டை எம்.எஸ்.பி. (MSP) திருமண மகாலில் வைத்து, இன்று [நவம்பர்.7] காலை 9 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை, இடைவெளியின்றி தொடர்ச்சியாக, மொத்தம் 5 மணி நேரம், நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள், நூற்றுக்கணக்கானோர், மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று, கருணாநிதியின் சிறப்பு அம்சங்கள் குறித்து, அழகாகவும், அருமையாகவும் பேசி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இந்த நிகழ்வில், திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான், "சிறப்பு" அழைப்பாளராக கலந்து கொண்டு, பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் "வெற்றி" பெற்ற, மாணவ மாணவியர்களுக்கு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளரும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான என். மாலை ராஜா, நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, ஒன்றிய செயலாளர் சூ.அருள்மணி, தி,மு.க. விவசாய அணி, மாநில நிர்வாகி வி.பொன்னையா பாண்டியன், "பல்லிக்கோட்டை" செல்லத்துரை, "பூக்கடை" அண்ணாதுரை, தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகள் "கல்லூர்" பாலா, ஆறுமுக ராஜா, இளைஞர் அணி மீரான், மிக்கேல் ,செண்டு, "சூப்பர் மணி", வட்டச் செயலாளர்கள் பத்மராஜ், "ஆவின்" கல்யாணி, வேல்முருகன், செந்தில் முருகன், "தலைமை கழக பேச்சாளர்" நெல்லை ரவி, ஷேக் தாவூத், காதர் ஒலி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.--------------------------"TALKS OF INDIA"செய்திகளுக்காக, நெல்லை பேட்டையில் இருந்து, திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர். "மேலப்பாளையம்"ஹஸன்.
Comments:
Leave a Reply