Wednesday, January 22
Breaking News:
Breaking News:
நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு அபூர்வ சகோதரர்கள் "குள்ள கமல் கெட்டப்பில் ஓவியர்" வரைந்த கமல் உருவம்!

நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு அபூர்வ சகோதரர்கள் "குள்ள கமல் கெட்டப்பில் ஓவியர்" வரைந்த கமல் உருவம்!

நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு

அபூர்வ சகோதரர்கள் "குள்ள கமல் கெட்டப்பில் ஓவியர்" வரைந்த கமல் உருவம்!


 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் அப்பு என்கிற கதாபாத்திரத்தில் வரும் "குள்ளக் கமல் கெட்டப்பில்"  ஓவியர் செல்வம் அவர்கள்

 கமல் படத்தை வரைந்தார்.தமிழ் திரை உலகில் பன்முகத்திறமைக் கொண்டவர்கள் பலர் இருந்தாலும், பலரிலும் தனித்து மேலோங்கி இருப்பவர் உலகநாயகன்  கமலஹாசன், தமிழ் சினிமா வரலாற்றின் ஒப்பற்ற கலைஞன், ஈடு-இணையற்றவர்  என்ற பட்டங்களுக்கு சொந்தக்காரர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, நடனம், கதை, திரைக்கதை,வசனம், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை ஒருங்கே  கொண்ட திரையுலக நாயகன் கமல்ஹாசன்.

 தனது நடிப்பில் இறுதியாக வெளியாகிய  விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் டைரக்டர்  சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும்  இந்தியன் 2 படம் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்நிலையில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்குகிறார், அரசியலிலும் ஜொலித்து வருகிறார்.நடிகர் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன் பாணியிலேயே அவர் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வரும் அப்பு கதாபாத்திரம் குள்ள கமல் போன்று  ஓவியர் செல்வம் அவர்கள் தனது உயரத்தை குறைத்து அபூர்வ சகோதரர்கள் "குள்ள கமல் கெட்டப்பில்" ஓவியர் செல்வம் அவர்கள்  கமல்ஹாசன் படத்தை ஐந்து நிமிடங்களில் வரைந்தார்.இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் கமல் அவர்கள் எப்படி வித்தியாசமாக நடிக்கிறாரோ அதே போன்று நீங்களும் வித்தியாசமாக வரையறிங்க என்று பாராட்டினார்கள். கள்ளக்குறிச்சி  மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *