நாகர்கோவிலில், கைது செய்யப்பட்ட, திராவிட தமிழர் கட்சி தோழர்களை, உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, திருநெல்வேலியில் போலீஸ் டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட, அனைத்துக் கட்சியினர்!
திருநெல்வேலி, அக்.2:-
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட, அருந்ததியர் மக்கள் குடியிருக்கும், கிருஷ்ணன் கோவில் தெருவை சார்ந்த, சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்துக்கு, இதுவரையிலும் இலவச பட்டா வழங்கப்படவில்லை. இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதன்காரணமாக, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும்! என்று அறிவித்திருந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தினரும், காவல்துறை அதிகாரிகளும், பேச்சு வார்த்தைக்கு அழைத்ததின் பேரில், இன்று (அக்டோபர்.2) காலையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால்
அந்த பேச்சு வார்த்தையில், சரியான முடிவு எட்டப்படவில்லை. எனவே, கூட்டத்தை விட்டு வெளியே வந்து, "பட்டா வழங்க வேண்டும்!'என்று, ஜனநாயக முறையில், பொதுமக்கள் கோஷம் எழுப்பி உள்ளனர். "இந்த இடத்தில் கோஷம் எழுப்பக் கூடாது!" என்று கூறிய, மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், திராவிட தமிழர் கட்சி மாநில பொறுப்பாளர்கள் சங்கர் கதிரவன் உள்ளிட்ட, மாநில பொறுப்பாளர்கள் மீது, கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி உள்ளார். அத்துடன், சாதியின் பெயரைச் சொல்லி, அனைவரையும் அவமானப்படுத்தியும், பெண்களிடத்தில் அத்துமீறியும் நடந்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள், வன்மையாக கண்டிக்கக்கூடியவை ஆகும்.
ஆகையால்,"ஜனநாயக முறையில், போராட்டத்தை முன்னெடுத்த, திராவிட தமிழர் கட்சி தோழர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்திவிட்டு, திராவிட தமிழர் கட்சியின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பெண்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!"
என்று, போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்ட, நெல்லை மாவட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
ஆதித்தமிழர் பேரவை,
தமிழ்ப்புலிகள் கட்சி,
திராவிட தமிழர் கட்சி,
ஆதித்தமிழர் கட்சி,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மாவீரன் சுந்தரனார் லிங்கனார் மக்கள் இயக்கம்,
தமிழர் உரிமை மீட்பு களம்,
எஸ்.டி.பி.ஐ.
மனிதநேய ஜனநாயக கட்சி,
பூர்வீக தமிழர் கட்சி,
இந்து மக்கள் கட்சி,
நாடார் பாதுகாப்பு பேரவை,
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி,
மக்கள் அதிகாரம்,
ஐக்கிய முஸ்லிம் முன்னணி கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், இந்த முற்றுகைப் போராட்டத்தில், கலந்து கொண்டனர்.
Tags:
Comments:
Leave a Reply