Wednesday, January 22
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேருந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்

நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேருந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்


நீலகிரி பாரளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, பேருந்து விபத்து நடந்த இடத்தில், 


விபத்து குறித்து குன்னூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் திரு. முனீஸ்வரன் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 


குன்னூர் மரப்பாலம் சுற்றுலா பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்து உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு திமுக சார்பில் நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நிவாரணத் தொகை வழங்கி ஆறுதல் கூறினார்...


நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று மாலை சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 


இதேபோல் இவ்விபத்தில் பலத்த காயமடைந்து இருவர் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் 

மா. சுப்பிரமணியம் மற்றும் 

சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் 


ஆகியோர் நேரில் சந்தித்து தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகையை வழங்கி பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்


டாக்ஸ் ஆப் இந்தியா நியூஸ் நீலகிரி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *