நெல்லை "தமிழ் அறிஞர்" கா.சு. பிள்ளையின், 135-வது பிறந்ததின விழா!
நெல்லை "தமிழ் அறிஞர்" கா.சு. பிள்ளையின், 135-வது பிறந்ததின விழா! நினைவிடத்தில், மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய தமிழ்ச்சான்றோர்கள்! திருநெல்வேலி,நவ.5:-
"தமிழ்த்தாத்தா" உ.வே.சா. மாணவரும், சென்னை சட்டக் கல்லூரி விரிவுரையாளரும், திராவிட இயக்க தலைவர்கள் "பேராசிரியர்" க.அன்பழகன், "நாவலர்" இரா.நெடுஞ்செழியன் போன்றோரின் ஆசிரியரும், அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவருமான, "நெல்லை தமிழ் அறிஞர்" கா.சுப்பிரமணிய பிள்ளை என்ற, கா.சு. பிள்ளையின், "135-வது பிறந்த தினம்" இன்று [நவம்பர்.5] கொணடாடப்பட்டது. இந்நாளையொட்டி, திருநெல்வேலி மாநகராட்சி முன்பாக அமைந்துள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ள, கா.சு.பிள்ளையின் நினைவிடத்தில், பல்வேறு இலக்கிய அமைப்புகளின் சார்பாக, தமிழ்ச்சான்றோர்கள் பலர், அங்குள்ள கல்வெட்டில், "மலர் மாலை" அணிவித்தும், மலர்கள்" தூவியும், மரியாதை "செலுத்தினர். நிகழ்ச்சியில், பாரதி முத்தமிழ் மன்ற மாவட்டச் செயலாளர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், திருநெல்வேலி மாவட்ட தமிழ் நலக் கழக, மாவட்ட செயலாளர் கவிஞர் "பாப்பாக்குடி" இரா. செல்வமணி, சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச்செயலாளர். கவிஞர் சு. முத்துசாமி, வ.உ.சி மணிமண்ட நூலக வாசகர் வட்ட துணைச்செயலாளர் தியாகராஜன்,அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்க மாநில தலைவர் கவிஞர் ந. சுப்பையா, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் புன்னைச்செழியன், மூக்குப்பீறி கிராமப்புற இலக்கிய சங்கத்தலைவர் கவிஞர் தேவதாசன், பாரதி முத்தமிழ்மன்ற அமைப்பாளர் கவிஞர். செ.ச. பிரபு ஆகிய தமிழ்ச்சான்றோர்கள், கலந்து கொண்டனர்.
Tags:
Comments:
Leave a Reply