Monday, December 23
Breaking News:
Breaking News:
கபசுர குடிநீர் வழங்கிய, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர்!

கபசுர குடிநீர் வழங்கிய, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர்!

திருநெல்வேலி மாவட்டம், மானூர் தெற்குப்பட்டியில், கபசுர குடிநீர் வழங்கிய, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர்! திருநெல்வேலி,நவ.5:- நெல்லை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில், விட்டு-விட்டு வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனை கருத்திற்கொண்டு, காய்ச்சல், சளி, புகைச்சல், இருமல் போன்ற தொற்று நோய்களில் இருந்து, மக்களை பாதுகாப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, "தமிழக மக்கள் ஜனநாயக கட்சி"யின், மானூர் ஊராட்சி ஒன்றியம், "தெற்குப்பட்டி" கிளை சார்பாக, இன்று

( நவம்பர்.5)  "கபசுர குடிநீர்" வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிளை தலைவர்    அப்துல் காதர் தலைமை வகித்தார்.

செயலாளர் ஆசிக் பயாஸ்,

பொருளாளர்

செய்யது அலி,

மானூர் ஒன்றிய செயலாளர்  சுஹைல் அகமது ஆகியோர், முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர்

உமர் பாரூக்,

மண்டல செயலாளர் "வழக்கறிஞர்"

 டி. அப்துல் ஜப்பார்,

மாவட்ட செயலாளர்

ஜமால்,

பழனிபாபா பேரவை

நெல்லை ரபீக்,

மாவட்ட இளைஞர் அணி அப்பாஸ், மாநகர இளைஞர் அணி சுலைமான் ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, "கபசுர குடிநீர்" விநியோக பணிகளில், தாங்களும்  ஈடுபட்டனர். தெற்குப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில், 

நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு, இவ்வாறு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில்,

மாவட்ட பொருளாளர்

சாந்தி ஜாபர், அனைவருக்கும் "நன்றி" கூறினார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *