Tuesday, December 24
Breaking News:
Breaking News:
பாலஸ்தீனில், இஸ்ரேல் நிகழ்த்திவரும், அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்து, திருநெல்வேலி மாவட்டம்   பத்தமடையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய, கண்டன ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீனில், இஸ்ரேல் நிகழ்த்திவரும், அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்து, திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய, கண்டன ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி,அக்.11:-

பாலஸ்தீனில், இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்தும், பாலஸ்தீனுக்கு  இந்தியா தொடர்ந்து, ஆதரவு அளிக்கக்  கோரியும், இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள், தடுத்து நிறுத்த வேண்டும்! என்பதை வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக, திருநெல்வேலி புறநகர் மாவட்டம் பத்தமடையில்,  இன்று (அக்டோபர்.11) மாலையில், கண்டன மற்றும்  கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 பத்தமடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருநெல்வேலி புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே. பீர் மஸ்தான்  தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, மாநகர் மாவட்ட தலைவர் கே.எஸ். சாகுல அமீது உஸ்மானி, புறநகர் மாவட்ட துணை தலைவர் முல்லை மஜீத், மாநகர் மாவட்ட துணை தலைவர் ஹயாத் முகம்மது, மாவட்ட பொதுச்செயலாளர்கள் களந்தை மீராசா, எம்.எஸ் சிராஜ், பொருளாளர் ஏர்வை இளையாராஜா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலீல், பத்தமடை நகர தலைவர் சரீப் ஆகியோர் உட்பட, திரளானோர்  கலந்து கொண்டு, பாலஸ்தீனத்துக்கு எதிராக, "கண்டன  கோஷம்" போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை, போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில், சிறிது நேரம் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும், எவ்வித நிபந்தனையுமின்றி விடுவித்தனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *