Monday, December 23
Breaking News:
Breaking News:
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தினம்! திருநெல்வேலியில் நெடுந்தூர ஓட்டப்போட்டி!  400 பேர் பங்கேற்று, உற்சாகமாக ஓடினர்!

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தினம்! திருநெல்வேலியில் நெடுந்தூர ஓட்டப்போட்டி! 400 பேர் பங்கேற்று, உற்சாகமாக ஓடினர்!

 திருநெல்வேலி,அக்.7:- மக்களிடையே உடற்கல்வி கலாச்சாரத்தை ஏற்படுத்தும்  நோக்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி மாவட்ட பிரிவு சார்பாக, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின்,  114-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி, இன்று (அக்டோபர்.7) அதிகாலையில் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இங்குள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் இந்த போட்டியினை,  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கா.ப.கார்த்திகேயன், பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார்.மொத்தம் 400 பேர், மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, உற்சாகத்துடன், ஓடி வந்தனர். 17 வயது முதல் 25 வயது வரையிலான நபர்களுக்கென, ஒரு பிரிவும், 25 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கென ஒரு பிரிவும் என, மொத்தம் 2 பிரிவுகளாக, இந்த போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கு 8 மற்றும் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும் போட்டிகள் நிகழ்ந்தன. முதல் பரிசாக, மொத்தம் 4 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக, மொத்தம் 4 பேருக்கு,  தலா 3 ஆயிரம் ரூபாயும், 3-வது பரிசாக,  தலா 2 ஆயிரம் ரூபாயும், 4 -வது  பரிசாக, மொத்தம் 28 பேருக்கு, தலா ஆயிரம் ரூபாயும், வழங்கப்பட்டன. ஒவ்வொருவரும் பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றனர். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விள்யாட்டு அலுவலர் அ.கிருஷ்ண சக்கரவர்த்தி, விளையாட்டு விடுதி மேலாளர் ஜே.ரத்தின ராஜ் உட்பட பலர், கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *