திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற, சிறுதானிய உணவுகள் கண்காட்சி! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துவக்கி வைத்து, பார்வையிட்டார்!
திருநெல்வேலி,அக்.7:-
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், முன்னேற விழையும் ஊராட்சி ஒன்றியமாக, இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பினை கொண்டாடி மகிழும் வகையில், இதற்கான விழா, இன்று (அக்டோபர்.7) நடைபெற்றது. இங்குள்ள வாகைக்குளத்தில் அமைந்துள்ள, "அருள்மிகு பன்னிருபிடி அய்யன்" கலை- அறிவியல் கல்லூரியில் வாகை குளத்தில் வைத்து நடைபெற்ற இந்த விழாவுக்கு, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எ. சின்னராசு தலைமை வகித்தார். தொடர்ந்து அவர், இவ்விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, சிறுதானிய கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர், கலந்து கொண்டனர். மாவட்ட கவுன்சிலரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான "வழக்கறிஞர்" கிருஷ்ணவேணி சின்னத்துரை, இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விழாவுக்கு பெருமை சேர்த்தார்.
சிறுதானிய உணவு கண்காட்சியில், மொத்தம் 22 வகையான, சிறுதானிய உணவுகள் காட்சிக்காக வைக்கப்பட்டு, அவற்றை உண்ண வேண்டியதின் அவசியம் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றிய குறிப்புகள், அந்தந்த உணவுடன் இணைக்கப்பட்டிருந்தன.இந்த கண்காட்சியை காணவந்திருந்த பார்வையயாளர்களுக்கு, சிறு தானிய உணவுகள் வழங்கப்பட்டு, அவற்றின் சிறப்புகள் எடுத்துக்கூறப்பட்டது. இந்த கண்காட்சிக்கான, அனைத்து ஏற்பாடுகளையும், ஆசிரியைகள் சாந்தி, ராஜாத்தி, ஆசிரியர் ரூபன், மற்றும் ஊர்ப்பிரமுகர் மாலா ஆகியோர், மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.
Tags:
Comments:
Leave a Reply