Monday, December 23
Breaking News:
Breaking News:
மதுராந்தகத்தில் நகைக்கடை உரிமையாளரை தாக்கும் CCTV பதிவால் பரபரப்பு

மதுராந்தகத்தில் நகைக்கடை உரிமையாளரை தாக்கும் CCTV பதிவால் பரபரப்பு

மதுராந்தகத்தில் நகைக்கடை உரிமையாளரை தாக்கும் CCTV பதிவால் பரபரப்பு தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமா காவல்துறை 

நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து வணிகர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நாளை கடையடைப்பு  மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக சங்க கூட்டமைப்பு தகவல்




செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஜார் வீதியில் ராஜேஷ் ஜுவல்லரி இயங்கி வருகிறது 

அதன் உரிமையாளர் பதம் சந்த் என்பவரை இதே மதுராந்தகத்தில் 

ஏ கே ஜுவல்லரி நகை நடை மற்றும் சிட் பண்டு நடத்தி வந்தவர் ஆனந்தன் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருடைய திருமண மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

நகை பண்டு சீட்டு பண்டு ஆகியவற்றை நடத்தி வந்த நிலையில் இவருக்கு சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து  கொண்டுள்ளதாகவும் சுமார் 200 நபர்களுக்கு மேல் சீட்டு பிடித்து அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் ஆனந்தனுடைய குடும்பத்தினருடன் சீட்டு பணம் கட்டியவர்கள் பணத்தை  கேட்டு வந்துள்ள நிலையில் இவர்கள் பல கோடி ரூபாய் மற்றவர்களுக்கு தர வேண்டிய பாக்கி தொகை உள்ள  நிலையில் ஆனந்தனுக்கு சீட்டு பணம் ரூபாய் 30 ஆயிரம் மட்டும் பாக்கி கொடுக்க வேண்டும் என ராஜேஷ் ஜுவல்லரி உரிமையாளர் பதம் சந்த் அவர்களை ஆனந்தனின் அண்ணன் பாபுவும் அவர் தந்தை கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று காலை பதாம் சந்த் அவருடைய கடைக்குச் சென்று மிரட்டி அவரை தாக்கி விட்டு சென்றுள்ளனர் 

இது குறித்து பதாம் சந்த் அவர்களின் மனைவி சப்னா என்பவர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அவருடைய புகாரின் பேரில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் நாளை மதுராந்தகம் அனைத்து வணிகர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக அனைத்து வணிகர் சங்கத்தில் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *