Wednesday, January 22
Breaking News:
Breaking News:
நிலவில் குழந்தை போல.. சுற்றி சுற்றி..சட்டென ரூட்டை மாற்றிய சந்திரயான் 3 பிரக்யான் ரோவர்!

நிலவில் குழந்தை போல.. சுற்றி சுற்றி..சட்டென ரூட்டை மாற்றிய சந்திரயான் 3 பிரக்யான் ரோவர்!

சென்னை: நிலவில் இருந்த மிகப்பெரிய குழி ஒன்றை பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக கடந்து உள்ளது. இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
பிரக்யான் ரோவர் நிலவில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. நிலவின் மீது சந்திரயான் 3 அடுத்தடுத்து கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. விக்ரம் லேண்டரில் இருந்து சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது. இதன் ரீடிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி நிலவில் இருக்கும் மணல் பரப்பு, உட்பரப்பில் செய்யப்பட்ட சோதனையில் அவை பெரிதாக வெப்பத்தை கடத்தவில்லை. அதேபோல் இங்கே வெப்பம் வேறு வேறாக இருக்கிறது. அதாவது ஒரே வெப்பம் இல்லை. வெப்பத்தில் பெரிய மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் விக்ரம் லேண்டரின் லேசர் மூலம் இயங்கும் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப், நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மேற்பரப்பில் கந்தகம் அதாவது சல்பர் இருப்பதை கண்டுபிடித்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. அங்கே "முதற்கட்ட பகுப்பாய்வு, மூலம், சந்திர மேற்பரப்பில் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகியவற்றின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது . மேலும் அளவீடுகள் செய்ததில் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஹைட்ரஜன் இருப்பு குறித்து முழுமையான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது" என்று இஸ்ரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரூட் மாற்றம்; இந்த நிலையில்தான் நிலவில் இருந்த மிகப்பெரிய குழி ஒன்றை பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக கடந்து உள்ளது. கடந்த 29ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இதன் மூலம் பிரக்யான், சந்திரயான் -3 ரோவர், நிலவில் அதன் முதல் மிகப்பெரிய தடங்களைகடந்துள்ளது - சுமார் 100 மிமீ ஆழம் கொண்ட சந்திர பள்ளம் என்று அழைக்கப்படும் நிலவின் குழியில் விழாமல் அது வெற்றிகரமாக கடந்து உள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக இதேபோல் நிலவின் குழிகளை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நிலவில் பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் விழாமல் பிரக்யான் ரோவர் செல்ல வேண்டும். இது மிக முக்கியமான விஷயம் ஆகும். அந்த வகையில் பள்ளங்களில் விழாமல் பிரக்யான் ரோவர் முதல் கட்டமாக நகர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளத்தை சுயமாக பிரக்யான் ரோவர் கடந்து உள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. அப்படியே நிலவின் மீது

சுற்றி சுற்றி கேமரா மற்றும் சென்சார் உதவியுடன் எந்த பாதையில் செல்வது என்பதை பிரக்யான் தீர்மானித்து உள்ளது. நிலவில் குழந்தை போல பிரக்யான் சுற்றி திரிவதாக இஸ்ரோ இதை வர்ணித்து உள்ளது. இந்த ரோவர் முழுக்க முழுக்க தன்னிச்சையாக இயங்கவில்லை. இதற்கு சில ஆர்டர்கள் பூமியில் இருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை மூலம் கொடுக்கப்படுகிறது. நாங்கள் இதற்காக பூமியில் இருந்து நிலவில் பிரக்யான் செல்ல வேண்டிய பாதையை திட்டமிடுவோம். ஒவ்வொரு 5 மணி நேரமும் இது கடக்க வேண்டிய பாதையை நாங்கள் கணக்கிடுவோம். குழிகள் குறைவாக உள்ள பகுதிகள், எளிதாக செல்ல வேண்டிய பகுதிகளை கணக்கிடுவோம்., அதில் இருக்கும் கேமராக்கள் உதவியுடன் ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கான பாதையை கணக்கிட்டு மேப் ஒன்றை உருவாக்குவோம். அதை பின்னர் பிரக்யான் ரோவரிடம் அனுப்புவோம். பின்னர் அந்த பாதையில் பிரக்யான் ரோவர் இயங்கும். இதற்காக 24 மணி நேரமும் ஆட்கள் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உள்ளனர். பிரக்யான் ரோவர்: பிரக்யான் ரோவர் நிலவில் இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு
அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலொஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இதில் மொத்தம் 6 சக்கரங்கள் இருக்கும். லேண்டர் தொகுதி: 26 கிலோ ரோவர் உட்பட 1752 கிலோ எடை கொண்டது. குறிக்கோள் என்ன?: சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது. லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல். இது வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நிலவின் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்வது. இந்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தல். நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *