Monday, December 23
Breaking News:
Breaking News:
மாநில அளவிலான விளையாட்டு போட்டியில், வெண்கலப்பதக்கம் வென்ற,நெல்லை நடுக்கல்லூர் அரசு பள்ளி மாணவர்கள்!

மாநில அளவிலான விளையாட்டு போட்டியில், வெண்கலப்பதக்கம் வென்ற,நெல்லை நடுக்கல்லூர் அரசு பள்ளி மாணவர்கள்!

மாநில அளவிலான விளையாட்டு போட்டியில், வெண்கலப்பதக்கம் வென்ற,நெல்லை நடுக்கல்லூர் அரசு பள்ளி மாணவர்கள்! 

பாராட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளன!திருநெல்வேலி.நவ.3:-  மாநில  அளவில் நடைபெற்ற, "அட்டயா பட்டயா" சேம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற, திருநெல்வேலி நடுக்கல்லூர்  அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இன்று [நவம்பர்.3] பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு,  பள்ளித் தலைமையாசிரியை ரோகிணி தலைமை வகித்தார். பள்ளி உதவித் தலைமையாசிரியர்   மைமூன் நிஸா  முன்னிலை வகித்தார். சுத்தமல்லி காவல் நிலைய,"சிறப்பு உதவி ஆய்வாளர்" சண்முகசுந்தரம், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வெற்றியாளர்களுக்கு  வெண்கலப்பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் வெள்ளிக் கோப்பை ஆகியவற்றை வழங்கி, பாராட்டினார். அத்துடன், தன்னுடைய மனமுவந்த வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொண்டார். முன்னதாக, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் "முனைவர்".வெ.பெரியதுரை, அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில போட்டியில், வெண்கலப்பதக்கம் வென்று, பள்ளிக்கும்- நெல்லை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த, 12-ஆம் வகுப்பு மாணவர்களான,

எம்.சுபாஷ்,

எல்.கணேசன், எஸ்.பேச்சி முத்து,  11-ஆம் வகுப்பு மாணவரான 

கே.முத்துராமன், 10-ஆம் வகுப்பு மாணவரான 

ஆர். இளமாறன்- ஆகிய ஐவரையும், விழாவிற்கு வந்திருந்த அனைவருமே, பாராட்டி மகிழ்ந்தனர். இது தவிர, இம்மாணவர்களுக்கு, வெளியில் இருந்தும், பாராட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளன.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *