மூன்று கிலோமீட்டர் நடந்து சென்று மின்மாற்றியை விவசாயிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ.
கரூர் மாவட்டம் க. பரமத்தி மேற்கு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6.00 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் நாச்சிபாளையம், ஊத்துக்கரப்பாளையம் பகுதியில் மின்மாற்றியை விவசாயிகள் பயன்பாட்டிற்காக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ தொடங்கி வைத்தார்.
குறிப்பாக ஊத்துக்கரப்பாளையம் பகுதியில் 16kv மின்மாற்றி விவசாயிகள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ திறந்து வைப்பதற்காக வந்த பொழுது மின்மாற்றி சாலையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் விவசாயம் நிலத்தை தாண்டி இருந்ததால் எம்எல்ஏ வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து விவசாயம் நிலத்தில் நடந்து சென்று மின்மாற்றியை தொடங்கி வைத்து.
பின்னர் அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து வந்து அவரது காரில் ஏரி புறப்பட்டு சென்றார்
Tags:
Comments:
Leave a Reply