மூலப்பொருள் விலை உயர்வால் ரிஷிவந்தியத்தில் இந்த ஆண்டு விநாயகர் சிலை விலையும் உயர்ந்துள்ளது
மூலப்பொருள் விலை உயர்வால் ரிஷிவந்தியத்தில் இந்த ஆண்டு விநாயகர் சிலை விலையும் உயர்ந்துள்ளது ஆகவே தமிழக அரசு தகுந்த நிதி உதவியும் வங்கிக் கடனும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்
வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தமிழக முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,கடந்த 12 ஆண்டுகளாக விநாயகர் சிலை தயாரித்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர், ஆண்டுக்கு 1,000 சிலைகள் வரை விற்கப்படுகிறது, அதுபோல் இந்த ஆண்டும் விநாயகர் சிலை தயாரிப்பில் தொழிலாளர்கள் தற்போது இரவு பகல் பாராமல் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் தொழிலாளர் தெரிவிக்கையில் நாங்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் கடந்த 12 வருடங்களாக குடும்பத்தினருடன் ஈடுபட்டுள்ளோம்,1அடி முதல் 15அடி உயரம் வரை பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறோம், ஆண்டுதோறும் சிலை தயாரிப்புக்கான பேப்பர் மாவு பொருட்கள் கோவை,சேலம்,ஆந்திரா பகுதியில் இருந்து வாங்கி வருகிறோம், சிமெண்ட் மூட்டை, அட்டைப் போன்றவை இந்த ஆண்டு மும்மடங்கு விலை உயர்ந்துள்ளது, சிமெண்ட் பேப்பர் மாவுடன் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது,50 கிலோ பசை மாவு கடந்த ஆண்டு 500 ரூபாய் இருந்தது இப்போது 1500 ரூபாயாகவும் அதேபோல் மாவு 200 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்கும் விலை உயர்ந்து உள்ளது, இதனால் இந்த ஆண்டு ஒரு அடி முதல் 15அடி வரையிலான விநாயகர் சிலைகள் 3000 முதல் 50,000 ரூபாய் வரை விலை சற்று விலை உயர்த்தி விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, இத்தொழிலுக்கு அரசு எந்த ஒரு நிதி உதவியும் வங்கிக் கடனும் வழங்கவில்லை,ஆகவே இந்த சிலை தயாரிப்பில் ஈடுபட்ட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன,ஆகவே இந்த தொழிலுக்கு தமிழக அரசு உரிய நிதி உதவி செய்து, எங்களுக்கு வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்,மேலும் ரிஷிவந்தியம் பகுதிகளில் திடீரென மழை பெய்து வருவதால் சிலை தயாரித்து வைப்பதற்கான இட வசதியின்றி பாதிப்பு ஏற்பட்டுள்ளது,இதனால் திடீர் மழையால் விநாயகர் சிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் சார்பில் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்
Tags:
Comments:
Leave a Reply