வசூல் வேட்டையில் ஈடுபடும் அணைக்கட்டு ஜி 10 காவல் நிலைய காவலர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அணைக்கட்டு ஜி 10 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலூர் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது அப்பகுதியை சார்ந்த 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மது பிரியர்கள் மது வாங்கி செல்வது வழக்கம் இந்த நிலையில் அணைக்கட்டு ஜி 10 காவல் நிலைய துணை ஆய்வாளர் தேவதாஸ் தலமையிலான குழு மதுபான கடை வாசலில் நின்று கொண்டு மது வாங்கிக் கொண்டு வெளியே வரும் நபர்களை பிடித்து பெட்டி கேஸ் போடுவதும் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு விட்டுவிடுவதும் வாடிக்கையாக உள்ளது இதனால் பாலூர் மதுபான கடையில் மது வாங்க வரும் மது பிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் மது வாங்கிக் கொண்டு வெளியே வரும் நபர்களை பிடிப்பதும் அவர்கள் மீது வழக்கு போடுவதும் வழக்கை சரி செய்ய அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதும் அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது அரசு அங்கீகாரம் பெற்ற மதுபான கடை வாசலில் காவல் நிலைய காவலர்கள் நின்று கொண்டு அவர்களை விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம் பணம் கொடுக்க மறுக்கும் நபர்கள் மீது வழக்கு போடுவதும் எந்த விதத்தில் நியாயம் இதை காவல் உயர் அதிகாரிகள் கண்டு கொள்வார்களா என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அரசு மதுபான கடையிலேயே இப்படி வசூல் வேட்டையில் இறங்கி உள்ளது காவல்துறையின் மேல் உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பொதுமக்கள் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Comments:
Leave a Reply