வரைபடம் மூலம் கிராமங்களில் பேரிடர் மேலாண்மை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் காரணைபெரிச்சானுர், சித்தேரிப்பட்டு ஆகிய கிராமங்களில் பேரிடர் மேலாண்மை பற்றி வரைபடம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் கற்பகம் அவர்கள், கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா குப்புசாமி அவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வகுமார் .பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ் மற்றும் பால் சிஸ்டஸ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. தரணிதரன், பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் பாரதி, பயிற்றுநர்கள் ப்ளோரா மேரி, பழனியம்மாள், பாக்கியலட்சுமி, கீதா, சித்திரவள்ளி, சரண்யா பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு செயலாளர் வசந்தா, கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர் கற்பகம், சமுதாய மகளிர் குழு பயிற்றுனர் ஜெகதீஸ்வரி, சமுதாய வள பயிற்றுநர் பரிமளா மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவ மாணவிகள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்
Comments:
Leave a Reply