Thursday, January 23
Breaking News:
Breaking News:
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்த திமுக அமைச்சர்

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்த திமுக அமைச்சர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பகன்டை கூட்டு சாலை பகுதியில் வாணாபுரம் புதிய தாலுக்கா அலுவலகத்தை மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை, மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, M.A., குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சிறப்புரையாற்றி சிறப்பித்தார்,இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.பிரகாஷ் வாணாபுரம் கிளைக் கழக செயலாளர்,.ராஜாராம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்,ராமன், .லட்சுமணன் ஆகியோர்கள் ஏற்பாட்டில் விழாவில் கலந்து கொண்ட அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் ஆள் உயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பித்தனர். மற்றும் திமுக நிர்வாகிகள். பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *