Wednesday, January 22
Breaking News:
Breaking News:
9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. குவிந்த தீயணைப்பு வீரர்கள்

9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. குவிந்த தீயணைப்பு வீரர்கள்

சென்னை: வேளச்சேரியில் பிரதான சாலையில் உள்ள 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை பரவி வருவதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையில் ரயில் நிலையம் அருகே 9 மாடி கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. சென்னை சில்க்ஸ் கடை அருகே கட்டப்பட்டு வரும் அந்த கட்டிடத்தில் 80 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் உள் அலங்கார பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ மள மளவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்குப் பரவியது. தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை பரவியது. இதனால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திற்கு அருகில் மிகப்பெரிய ஜவுளிக்கடை இருந்தது. அங்கு பொருட்களை வாங்க வந்த மக்கள் மற்றும் அருகில் குடியிருப்புகள் இருப்பதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து வருகின்றனர். கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியால், கட்டுமான தொழிலாளர்கள் அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். கட்டிடத்திற்கு உள்ளே இருந்தவர்கள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறியதாக தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்

வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் அச்சமடைந்தனர். தீ விபத்து காரணமாக கரும்புகை பரவி வருவதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன



Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *