Wednesday, December 25
Breaking News:
Breaking News:
ஆசிரியர் தினத்திலாவது  பகுதிநேர ஆசிரியர்களுக்கு தித்திக்கும் செய்தியாக பணிநிரந்தரம் தமிழக அரசு அறிவிக்க வேண்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை "தேனாலே" வரைந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டும், ஆசிரியர் தினமான அன்று பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் என்ற தித்திக்கும் அறிவிப்பு  தமிழக அரசு அறிவிக்க வேண்டியும் பெயிண்டுக்கு  பதிலாக "தேனாலேயே" டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை வரைந்து கோரிக்கை வைத்தார்.

 ஆசிரியர்ப் பணி அறப்பணி என்பார்கள், அத்தகைய ஆசிரியர்களை வணங்கி அவர்களின் சேவையை நினைவு கூறும் நாளே ஆசிரியர் தினம். ஆசிரியராய் வாழ்வைத் தொடங்கி நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

 டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் முன்னிட்டும், ஆசிரியர் தினத்திலாவது பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாகவும்,

 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்கள் குறைந்த சம்பத்தில் தவிக்கின்றனர், மே மாதமும் சம்பளம் இல்லை, கசப்பான பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்வை பணி நிரந்தரம் என்ற  தித்திக்கும் அறிவிப்பு தமிழக அரசு அறிவிக்க வேண்டி பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் பெயிண்டுக்கு பதிலாக,

"தித்திக்கும் தேனில்" பிரஷ் தொட்டு பத்து நிமிடங்களில்  டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை வரைந்தார்.

 இந்த ஓவியத்தை பார்த்த ஆசிரியர்கள், பொதுமக்கள் வாயில் இச்சி உற ஓவிய ஆசிரியர் செல்வத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *