Wednesday, January 22
Breaking News:
Breaking News:
உச்சத்தை தொட்ட இஞ்சி விலை.! சர சரவென குறைந்த தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறிகள் விலை என்ன தெரியுமா.?

உச்சத்தை தொட்ட இஞ்சி விலை.! சர சரவென குறைந்த தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறிகள் விலை என்ன தெரியுமா.?

கோயம்பேடு் சந்தையில் காய்கறி விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், இஞ்சியின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதுகாய்கறி விலை என்ன.?

காய்கறிகளின் வரத்தை பொறுத்து கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி விற்பனை விலையானது ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை சரிவை நோக்கியும், குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சி விலை உச்சத்தையும் தொட்டுள்ளது. அந்த வகையில் கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை என்னவென்று தற்போது பார்க்கலாம்கேரட் ஒரு கிலோ என்ன விலை

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 சரிவை நோக்கி தக்காளி விலை

காலிஃப்ளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலையானது கடந்த மாதம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  தற்போது தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதன் காரணமாக தக்காளி விலையானது சரசர என குறைந்து தற்போது ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறதுஉச்சத்தில் இஞ்சி விலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இஞ்சியின் விலை 1 கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இஞ்சியின் விலையானது தங்கத்திற்கு நிகராக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ இஞ்சியானது 300 ரூபாயை தொட்டுள்ளது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *