கரூரில் பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி.200-க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் பங்கேற்பு:
தமிழகம் முழுவதும் இன்று பசுமை தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட வனத்துறை சார்பில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரி வரை சென்றது.
200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட.பேரணியில் மரம் வளர்க்க வேண்டிய அவசியம், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணியாக சென்றனர்.
முன்னதாக கரூர் மாவட்ட வனத்துறையினர் வேம்பு ஆலம் இலுப்பை என பலவகையான நாட்டு மரக்கன்றுகளை பள்ளி கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகள் என பல ஆர்வமுடன் கலந்து கொண்டு 2500 மரக்கன்றுகளை நட்டனர்
Tags:
Comments:
Leave a Reply