கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் எட்டாவது நாள் நவராத்திரி கொலு பொதுமக்கள் வழிபாடு.
அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது.கொலு வைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் நவராத்திரி விழா தொடங்கியதில் தொடர்ந்து 9 நாட்களிலும் ஆலயங்களில் சிறப்பு பூஜை நடைபெற்று
தொடர்ந்து நவராத்திரி திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் கரூர் மாநகரில் உள்ள அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு தினதோறும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இன்று 8-வது நாளக வைக்கப்பட்டுள்ள கொலுவில் அம்மன், விநாயகர், கிருஷ்ணர், பெருமாள், சிவன் வடிவில் என ஏராளமான சிலைகள் கொழுவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
நவராத்திரி கொலுவில் சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Tags:
Comments:
Leave a Reply