கரூர்அருகே மணவாசி மாயனூர் சுங்கச்சாவடி முன்பு சுங்க கட்டணம் உயர்வினை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கரூர்அருகே மணவாசி மாயனூர் சுங்கச்சாவடி முன்பு சுங்க கட்டணம் உயர்வினை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே மணவாசியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.
இந்த சுங்க சாவடியில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி வாகனங்களுக்கு ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதனை கண்டித்து கரூர் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட தேமுதிக சார்பில் சுங்கச்சாவடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் அரவை முத்து, புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கரூர் மாவட்ட தேமுதிகவினர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வினை கண்டித்து கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர்.
மேலும் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது மாயனூர் வரை நான்கு வழி சாலை ஆகும் மாயனூரில் இருந்து திருச்சி வரை இருவழி சாலையாகவும், சாலைகள் குண்டும், குழியுமாகவும் உள்ளதாகவும், இருவரின் சாலைக்கு சுங்க கட்டணமா, சாலையை சீரமைக்காமல் முறையாக பராமரிப்பு மேற்கொள்ளாமல் உள்ள நிலையில் சுங்க கட்டணத்தை மட்டும் நிர்வாகம் உயர்த்தி வருவதாகவும், மேலும் இந்த சுங்கச்சாவடி செயல்படுவதற்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் காலம் முடிந்த பிறகும் தற்போது பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த சுங்கச்சாவடி செயல்பட்டு வருவதாகவும், தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில் சாலையினை அகலப்படுத்தாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதாலும் இந்த சாலையில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு சுங்கச்சாவடி நிர்வாகமே காரணம் என்றும் கண்டித்து கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிகவை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்
Tags:
Comments:
Leave a Reply