Wednesday, October 16
Breaking News:
Breaking News:
காவல் நிலைய பணிகளை பள்ளி மாணவர்கள் பார்வை

காவல் நிலைய பணிகளை பள்ளி மாணவர்கள் பார்வை


திருக்கோவிலூர் ஸ்ரீ சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவிகள், திருக்கோவிலூர் காவல் நிலையத்தை நேற்று

நேரில் பார்வையிட்டனர். காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன், மாணவர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்வது, செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி என்பதை பற்றியும் கூறினார். மேலும் மாணவர்கள் எவ்வாறு காவல்துறை சார்ந்த படிப்புகளை பயில்வது, வேலைவாய்ப்பு எப்படி பெறுவது என்றும் விளக்கப்பட்டது.

காவல் நிலையங்களில்

புகார் அளிக்க வயது வரம்பு இல்லை என, மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ஏற்படுத்தப்பட்டது.  இதையடுத்து, துப்பாக்கி வைத்திருக்கும்

அறை, கம்ப்யூட்டர் அறை, இன்ஸ்பெக்டர் அறை, தகவல் பலகை மற்றும் கோப்புகளை  பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

காவல் நிலையத்தில் பயன்படுத்தப்படும்

துப்பாக்கிகள் குறித்தும், பள்ளி

மாணவர்களுக்கு விளக்கம்

அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 3ஆம் வகுப்பு மாணவி உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர வேண்டும் என்று கேட்டதை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளரின் நாற்காலியில் அமர வைத்து மாணவியின் ஆசையை நிறைவேற்றிய காவல் உதவி ஆய்வாளர் அன்பழகனின் செயல் நெகிழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இறுதியாக காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் ,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நடராஜ், பள்ளியின் முதல்வர் கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *