Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கிருஷ்ணகிரி அருகே உள்ள டாக்டர் அப்பேத்கார் நகரில் அடிபடை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்

கிருஷ்ணகிரி அருகே உள்ள டாக்டர் அப்பேத்கார் நகரில் அடிபடை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்

கிருஷ்ணகிரி அருகே உள்ள டாக்டர் அப்பேத்கார் நகரில் அடிபடை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மகாத்மா காந்தி நூறுநாள் வேலை வழங்காமல் அலைக் கழித்து வருவதாக குற்றச்சாட்டு.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

 கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கார் நகர் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்கு குமார் அரசு துறை அதிகாரிகளுடன் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது டாக்டர் அம்பேத்கார் நகரில் குடியிருந்து வரும் மக்களை நேரடியாக சத்தித்து தங்களது அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது கழிவு நீர் கால்வாய்கள் முறையாக  தூர்வாரப்படதாதல் கொசுக்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது, தெருவிளக்கு கூட சரிவரை எரிவது இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் குறிப்பாக இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய மகாத்மா காந்தி நூறு நாள் வேலையை திம்மாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி

 வழங்குவது இல்லை என குற்றம்சாட்டினார்கள்.

இது தொடர்பாக டாக்டர் செல்லக்குமார் காவேரிப்பட்டிணம் வட்டார வளர்ச்சி அலுவலர்களான சுப்பிரமணி, உமாசங்கர் ஆகியோரை உடனடியாக வரவளைத்து ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி நூறு நாள் வேலை வழங்காமல் மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிகிறது

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வழியுறுத்தினார்.

மேலும் ஊராட்சிகளில் செயல் படுத்தப்பட்டு வரும் நூறுநாள் வேலையை முறையாக வழங்க மறுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு,தகுதி உள்ள அனைவருக்கும் நூறுநாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் கிராம மக்களிடம் உறுதி அளித்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத்தலைவர் சேகர் முன்னால் மாவட்டத் தலைவர் நாஞ்சில் ஜேசு,  சேவாதள மாவட்டத் தலைவர் தேவராஜ், நகர தலைவர் முபாரக், கலை இலக்கிய பிரிவு மாவட்டத் தலைவர் கோவிந்த சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்கள்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *